உத்தரபிரதேச மாநிலம் படாவுன் நகரின் போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட புறக்காவல் நிலையம் ஒன்று சதார் கோட்வாலி பகுதியில் அமைந்துள்ளது. இப்புறக்காவல் நிலையத்தில் வைத்து 17 வயது சிறுமியை இரண்டு போலீசார் கற்பழித்துள்ளனர்.இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ரத்தன் குமார் ஸ்ரீவாத்சவா கூறியதாவது;
ராம்பூர் மாவட்டத்திலிருந்து ரேஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 17 வயது சிறுமி, சதார் கோட்வாலி பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இச்சிறுமியும் இவரது தாத்தாவும் இப்பகுதியில் உள்ள கல்லறைக்கு நேற்றிரவு பூஜை செய்ய வந்திருக்கின்றனர்.
இரவு நேரமாகிவிட்டதால் இருவரும் அங்கேயே தங்கியுள்ளனர். இரவு ரோந்துப் பணிக்கு வந்த படாவுன் நகர போலீசார் இருவர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, சதார் கோட்வாலி புறக்காவல் நிலையத்தில் வைத்து கற்பழித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கற்பழிப்பில் ஈடுபட்ட இரண்டு போலீசாரையும் கைது செய்திருக்கிறோம். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக