தெற்கு இத்தாலியின் பிரிண்டிஸி நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், 7 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து பிரிண்டிஸி நகர மேயர் மிம்மோ கான்சேல்ஸ் கூறியதாவது, இன்று
காலை பள்ளிக்கூடம் அருகே திடீரென குண்டு வெடித்தது.
இதில் சிக்கி படுகாயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இரண்டு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடையந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
இத்தாலிய உள்துறை பாதுகாப்பு அமைச்சரான பாபியானோ அமதி கூறுகையில், இந்த குண்டுவெடிப்பு மிகவும் கண்டனத்திற்குரியது. குண்டு வெடிப்பில் இப்பள்ளிக்கூடம் சேதமடைந்துள்ளது, புத்தகங்களும் புத்தகப் பைகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட இடத்திலிருந்து மூன்று காஸ் சிலிண்டர்களை பொலிசார் கண்டெடுத்துள்ளனர். இவற்றில் வெடிகுண்டை பொருத்தி ரிமோட் மூலம் வெடிக்க வைத்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளிகூட காம்பவுண்ட் சுவர் அருகே வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியில் ஒரு பள்ளிகூடத்தை குறி வைத்து தாக்கியது இதுவே முதல் முறை.
குறிப்பிட்டு இந்த பள்ளியை தாக்க வேண்டியதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை என்று கூறினார். இத்தாலிய பொலிஸ் உயரதிகாரியான பிரான்செஸ்கோ மார்விலோ கூறுகையில், இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தபட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்றார். அங்குள்ள மாபியா கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக