சவூதி அரேபிய எஜமானன் ஒருவருக்கு அவருடைய எதியோப்பிய நாட்டு பணிப்பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சமையல் அறைக்குள் இரகசிய கமரா ஒன்றை பூட்டினார்.இவர் கமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பின்னர் சோதனை செய்தபோதுபேரதிர்ச்சி அடைந்து விட்டார். சாப்பாட்டில் பணிப்பெண் சிறுநீர் கலக்கின்றார் என்கிற விபரீதம் தெரிய வந்து உள்ளது. சமைக்கின்ற பாத்திரத்துக்குள் பணிப்பெண் சிறுநீர் கழிக்கின்றமையையும் பின் அப்பாத்திரத்தில் சமையல் மேற்கொள்கின்றமையையும் கமரா காட்டிக் கொடுத்து உள்ளது.
அந்நாட்டின் அரபு மொழி தினசரி பத்திரிகைகளில் ஒன்றான Sharq இத்தகவலை பிரசுரித்து உள்ளது. அத்துடன் கமராவில் பிடிபட்ட காட்சிகளை ஒரு நிமிட வீடியோவாக கொடுத்து உள்ளது. ஆயினும் சவூதி அரேபிய எஜமானன் எப்பிரதேசத்தில் வாழ்கின்றார் என்பதை பத்திரிகை வெளிப்படுத்தவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக