ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதால், நடிகை பூனம் பாண்டே இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.21 வயது பூனம் பாண்டே
21 வயதான நடிகையும், பிரபல மாடல் அழகியுமான பூனம் பாண்டே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
ஆனால், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றும், பூனம் நிர்வாணமாக தோன்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி வெற்றி பெற்றால் `நிர்வாண போஸ்’ கொடுப்பதாக மீண்டும் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை தோற்கடித்த `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி `சாம்பியன்’ பட்டம் வென்றது.
நிர்வாண போஸ்
அதைத்தொடர்ந்து, இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றிய பூனம் பாண்டே `டுவிட்டர்’ இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் பூனம் பாண்டே படுத்திருப்பது போன்ற நிர்வாணப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
“இந்தப்படம் ஒரு முன்னோட்டம்தான்; நான் நடித்து வெளிவர இருக்கும் சினிமா படத்தில் இதுபோன்ற ஏராளமான காட்சிகளை காணலாம்” என்றும், பூனம் பாண்டே குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிர்வாண படம் குறித்து அவருடைய ரசிகர்கள் தங்கள் சுவையான விமர்சன கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக