அரசியல் தேர்தல் என்றாலே ஒருவித கொண்டாட்டம் தான். எத்தனைவிதமான பிரச்சார உத்திகள். அதுவும் இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்சாரம் தான்.மக்களிடம் வாக்குகளை கோரி நிற்கும் வேட்பாளர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
என்பது எழுதப்படாத நியதி.மெக்சிக்கோ மக்களவை தேர்தலுக்காக வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கும் பெண் ஒருவரின் வெளிப்படையான பிரசாரம் பலரது புருவங்களை உயரச் செய்திருக்கிறது.
தத்துவவியல் பேராசிரியையான நத்தாலியா யுவாரெஸ் அரசியலில் பெரும் சர்ச்சைக்குரிய விடத்தினை மேற்கொண்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றுது.என்னவென்று யோசிக்கின்றீர்களா? அதாவது தனது மேலாடைகளை களைந்து தமது வெளிப்படைத் தன்மையை தெரிவிக்கும் தேர்தல் உத்தியை கையாண்டு இருக்கிறார்.ஜனநாயக புரட்சிக்கான கட்சியை சேர்ந்த பெண்களோடு இவர் மேலாடை இன்றி தோன்றும் புகைப்படம் அடங்கிய பதாதைகள் பிரசார விளம்பரமாக மாறியிருக்கிறன.தமது சோம்பேறித்தனமான சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தமது நோக்கம் என பேராசிரியை நத்தாலியா யுவாரெஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக