தைவானை சேர்ந்தவள் லீமா (14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவள் ஒரு பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வந்தாள். இவளுக்கு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் கர்ப்பிணி ஆனாள். இதை அவள் யாரிடமும் தெரிவிக்க வில்லை.
இதை அவளது பள்ளி ஆசிரியைகளும் கண்டு பிடிக்கவில்லை. ஏனெனில், அவளது உடல் எடை அதிகரித்து குண்டாகி விட்டாள் என கருதினர். நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த அவள் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்தாள். வகுப்பறையில் இருந்த அவளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே, தனக்கு வயிறு வலிப்பதாகவும், ஆகவே கழிவறை செல்ல வேண்டும் எனவும் ஆசிரியையிடம் கூறினாள். பின்னர் கழிவறை சென்ற அவள் அங்கு ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்.
இதற்கிடையே கழிவறைக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதன் பிறகு தான் மாணவி லிமாவுக்கு குழந்தை பிறந்த விவரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக