Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » திருமண வீட்டில் மொய் கவர்களை திருடி சுற்றுலா சென்ற தந்தை, மகன் கைது

திருமண வீட்டில் மொய் கவர்களை திருடி சுற்றுலா சென்ற தந்தை, மகன் கைது

Written By ADMIN on திங்கள், 21 மே, 2012 | 8:07 PM


தர்மபுரி மாவடாம், அரூரில் உள்ள ஒரு திருமண வீட்டில் மொய் கவர் திருடிய தந்தை, மகனை போலீஸார் கைது  செய்தனர்.அரூர் பள்ளம் உள்ளது அம்மாபேட்டை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் வயது-37. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி அரூர் என்.என்.திருமண
மண்டபத்தில் திருமணம் நடந்தது.
அப்போது, திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மொய் கவர் பணம் 50,000 ரூபாய் மற்றும்  மோதிரம் உள்ளிட்ட 60,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது.
அரூர் அடுத்த தாசரஅள்ளியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் வயது-60. இவரது மகன் இளங்கோவனுக்கு கடந்தாண்டு  டிசம்பர் 1-ம் தேதி அரூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
அப்போது, மொய் கவரில் வசூல் செய்து வைக்கப்பட்டிருந்த 11,000 ரூபாய் திருடு போனது. இவ்விரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் அரூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இரு திருமண வீட்டிலும் எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ காட்சிகளில் இடம் பெற்ற அறிமுகம் இல்லாத நபரை இரு வீட்டாரும் போலீஸாருக்கு சுட்டி காட்டினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக