Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » எங்களுக்கு ஆதரவு அளிக்கிறது அ. தி. மு. க! – நித்தியானந்தா

எங்களுக்கு ஆதரவு அளிக்கிறது அ. தி. மு. க! – நித்தியானந்தா

Written By ADMIN on வெள்ளி, 18 மே, 2012 | 4:35 PM

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நித்யானந்தா, திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலில் தரிசனம் செய்ய வந்தபோது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக
பொறுப்பேற்றேன். இந்த அரசு எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் பல இடங்களுக்கு சென்றுவர முடிகிறது என கூறினார்.

மேலும், இவர் மீது ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவிப்பதை குறித்து கேட்டபோது ஜெயேந்திரர் எனக்கு எதிராக இனி குற்றச்சாட்டு எழுப்பினால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

ஆதீன இடம் ஆக்கிரமிப்பு குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஆதீனம் இடத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களை ஓடஓட விரட்டுவேன் என கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக