டுபாயில் வாடகை வண்டி ஒன்றின் பின் இருக்கையில் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொண்ட பிரித்தானிய பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவருடன் உறவு கொண்ட ஐயர்லாந்து நாட்டு பிரஜை ஒருவருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பொது இடத்தில் பாலுறவு கொண்டமை, மது அருந்தியமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் திருமண பந்தத்தித்திற்கு புறம்பாக பாலுறவு கொள்ளுதல், பொது இடங்களில் உறவு கொள்ளுதல், பொது இடங்களில் மது அருந்துதுல் ஆகியன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
ஆளனி முகாமைத்துவ ஆலோசகரான ரெபெக்கா பிளக் என்ற 29 வயதான பிரித்தானிய பெண்ணும், மெக்ரொமோன்ட் என்ற ஜயர்லாந்து பிரஜையுமே வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
வாடகை வண்டியில் நாள் முழுவதும் குடித்துக் கும்மாளம் அடித்த இந்த ஜோடி பாலுறவில் ஈடுபடுவதை கண்ணாடி ஊடாகக் கண்ட வாகன சாரதி, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட போது குறித்த பெண் முழு நிர்வாணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக