சீனாவின் கன்சு மாகாணத்தில் வீசிய கடும் புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. அம்மாகாணத்தின் இரு மலைப் பிரதேசங்களான மின்க்ஸியான் மற்றும் ஷான்க்ஸியான் ஆகிய நகரங்களில் கடந்த ஒரு வாரமாகக் கடும்
மழையுடன் புயல் காற்று வீசி வருகிறது.
இதில் நேற்று வெள்ளி மாலை வரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்வடைந்துள்ளதுடன், மேலும் 15 பேர் காணாமற் போயுள்ளனர். மின்க்ஸியான் நகர்ப் பகுதியில் மட்டும் 47 பேர் இறந்துள்ளனர் இதில் 12 பேர் காணாமற் போயும் உள்ளதுடன் கிட்டத்தட்ட 60 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டும் உள்ளனர்.
(0513 CR M07)NW CHINA STORMS TOLL RISES von tvnportal
ஷான்க்ஸியான நகரத்தில் 10 பேர் மரணமடைந்தும் 3 பேர் காணமற் போயுமுள்ளனர். இங்கு ஆலங்கட்டி மழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மின்க்ஸியானி நகர்ப் பகுதியில் கடும் புயல் வீசியதுடன் ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டதால் அப்பகுதியிலுள்ள 358 000 பொது மக்கள் பாதிக்கப் பட்டிருந்தனர்.
மேலும் 30 000 பொது மக்கள் தமது வதிவிடத்தை விட்டு வெளிப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். மேலும் இந்த இயற்கை அனர்த்தத்தால் சீன அரசுக்கு 1.1 பில்லியன் $ அமெரிக்க டாலர்கல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீன செய்தித் தளமான சின்ஷுஹா தெரிவித்திருக்கின்றது.
சுமார் 450 000 சனத் தொகையுடைய மின்க்ஸியான் நகரம் ஷொவுக்கு நகரத்தில் இருந்து 150 Km தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆகஸ்ட் 2010 இல் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 1500 ஏற்கனவே பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக