Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » பொன்சேகா 7 ஆண்டுகள் வரையில் தேர்தலில் போட்டியிட முடியாது: சட்ட மா அதிபர்!

பொன்சேகா 7 ஆண்டுகள் வரையில் தேர்தலில் போட்டியிட முடியாது: சட்ட மா அதிபர்!

Written By ADMIN on புதன், 23 மே, 2012 | 6:40 AM


ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஏழாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவிற்கு நிபந்தனை அடிப்படையிலான
பொது மன்னிப்பே வழங்கப்பட்டுள்ளது.

ஏழாண்டுகள் வரையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. எனினும் தேர்தலில் வாக்களிக்க முடியும். சரத் பொன்சேகா சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட வேண்டிய காலத்திற்கே ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்படி, அவர் சிறைத் தண்டனை அனுபவித்த நபர் ஒருவராகவே கருதப்பட வேண்டும்.

தப்பிச் சென்ற படைவீரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடர்ந்தும் நீதிமன்றில் வழக்கொன்று விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக