இலங்கையில் போர்குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்று விடுதலையான சரத்பொன்சேகா BBC தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பி.பி.சி செய்திசேவை அவரை பேட்டி கண்டுள்ளது.
அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணைய தாம் வரவேற்பதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா...,
ஆனால் இலங்கையில் போர் குற்றம் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். தம்மால் தற்போது இருக்கும் சூழ் நிலையில் அரசியலில் ஈடுபடமுடியுமே தவிர, போட்டியிடவோ இல்லை வோட்டுப்போடவோ முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
சிறைத் தண்டனைக்காலம் முடிவடைவதற்கு முன்னர், சரத்பொன்சேகா விடுதலையாகியுள்ளார். இருப்பினும் இலங்கை அரசானது உத்தியோகபூர்வமாக அவரது சிறைத்தண்டனைக் காலத்தை தள்ளுபடிசெய்யும் வரை, அவரால் வோட்டுப்போடவோ இல்லை அரசியலில் இறங்கி வேட்பாளராகப் போட்டிபோடவோ முடியாது.
இலங்கை அரசானது சரத்பொன்சேகாவை வெளியே விட்டாலும், ஒரு பாரிய பூட்டு ஒன்றைப் போட்டே வெளியே விட்டுள்ளது. அவர் ஒரு அரசியல் நடைபிணம் போலவே இருக்க முடியும் என்பதே உண்மை நிலையாகும்.
ஆனால் சரத்பொன்சேகா விடுதலையானதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆர்வம் காட்டுவதாகவும் மேலும் அறியப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக