Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சவூதி பிரஜைகள்!

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சவூதி பிரஜைகள்!

Written By ADMIN on செவ்வாய், 22 மே, 2012 | 12:57 PM

 மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு சவூதி அரேபிய பிரஜைகளையும் அதற்கு உடந்தையாக இருந்த இலங்கை பெண்ணையும் ஹிக்கடுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


ஹிக்கடுவை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே இச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 17 வயதுடைய இச்சிறுமியை மருதானை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே சவூதி அரேபிய பிரஜைகளுக்கு பணத்திற்காக விற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :

ஒந்தாச்சிமடத்தை சேர்ந்த சிறுமியை வெளிநாட்டிற்கு தொழில் வாய்ப்பிற்கு அனுப்புவதாக ஏமாற்றி மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிற்கு அழைத்து வந்து மருதானை பெண்ணொருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த மருதானை பெண்ணே திட்டமிட்டு இச்சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

மருதானை விபுலசேன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் ஏற்கனவே சவூதி அரேபியாவில் வீட்டுப்பணிப் பெண்ணாக தொழில் புரிந்து விட்டு இலங்கை வந்துள்ளார். அதேபோன்று சவூதி பிரஜைகள் இருவரும் இலங்கை பணிப்பெண்களை சவூதிக்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணையும் இரு சவூதி பிரஜைகளையும் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதுடன் ஒந்தாச்சிமடத்திலிருந்து சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக