Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » மனைவியைக் கொன்ற கணவன் தலைமறைவு!

மனைவியைக் கொன்ற கணவன் தலைமறைவு!

Written By ADMIN on ஞாயிறு, 27 மே, 2012 | 2:50 PM


தன்மீது சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பிய மனைவியைக் கொன்ற கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் சிவஞானபுரம் பாரதிநகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி புஷ்பவல்லி( 28). இவர் ஆட்டோ
டிரைவராக உள்ளார். இவருக்கு வேறு பெண் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தால் அடிக்கடி வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மரக்கட்டையால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார் காளீஸ்வரன். இதில் மனைவி புஷ்பவல்லி உயிரிழந்தார். இதையடுத்து அவர் தலைமறைவானார். புஷ்பவல்லியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கேணிக்கரை போலீஸார், தலைமறைவான காளீஸ்வரனைத் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக