Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு! மனமுடைந்த மனைவி தற்கொலை!

வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு! மனமுடைந்த மனைவி தற்கொலை!

Written By ADMIN on ஞாயிறு, 27 மே, 2012 | 2:41 PM

வேறொரு பெண்ணுடன் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் என்ற ரகுபதி(28)
. இவரது மனைவி புனிதா (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ரகுபதிக்கும் பூண்டி அருகே நெய்வேலி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரகுபதிக்கும் புனிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை காலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த புனிதா மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனால் புனிதாவுக்கும் அவரைக் காப்பாற்ற முயன்ற ரகுபதிக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் புனிதா உயிரிழந்தார். ரகுபதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக