சென்னை: வாய்ப்பு குறைந்து வருவதால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் பத்மப்ரியா. முன்னணி நடிகைகளுக்கு மார்க்கெட்
டல்லடிக்கும்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொள்வதுண்டு. பல நேரங்களில், ஆடினால் இமேஜ் பாதிக்கும் என்று ஒதுங்குபவர்களும் உண்டு. தற்போது குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே நடித்து வருகிறார் பத்மப்ரியா.
வாய்ப்பு குறைந்து வருவதால் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்கிறார் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. அமல் நீரத் இயக்கும் ‘பேச்சுலர் பார்ட்டி என்ற மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கேட்டதும் ஓகே சொல்லிவிட்டார் பத்மப்ரியா. இது பற்றி அவர் கூறியதாவது:
இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டது உண்மைதான். படத்தின் கிளைமாக்ஸ் முடிந்து பணியாற்றியவர்களின் பெயர்கள் வரிசையாக காட்டப்படும்போது நான் நடனம் ஆடும் காட்சி இடம்பெறுகிறது. இப்பாடலில் படத்தில் நடித்த எல்லா நட்சத்திரங்களும் இடம்பெறுகின்றனர்.
நடிகை என்றால் எல்லா வேடங்களுக்கும் வளைந்துகொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். ஒரு சிலர், நடிகையின் கவர்ச்சியான நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்கேற்ப உடை அணிவதில் தவறில்லை. இது கலைக்கு ஒரு நடிகை செய்யும் நியாயம். இவ்வாறு பத்மப்ரியா கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக