இலங்கை மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் எதுவும் வந்தால் அத ற்கு இலங்கை ஒத்துழைக்க வேண் டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.சுமார் 2 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, இலங்கை மீது பழி சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை எதுவும் வந்தால் இலங்கை அதற்கு நிச்சயம் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் இலங்கையின் தலைவர்கள் சிலர் தமது முகத்தை மூடிக் கொள்கின்றார்கள் என்று பிபிசி க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்த சரத் பொன்சேகா, அவர்கள் நடந்து கொள்வது எதையோ மறைக்க முற்ப டுகிறார்கள் என்ற எண்ணம் மற்றவ ருக்கு தோன்றக் காரணமாக இருக்கி றது எனக் கூறினார். சிறையில் இரு ந்து வெளிவந்த பின்னர் முதல் தட வையாக பொன்சேகா பிரத்தியேக பேட்டியளித்திருப்பது பிபிசிக்குத் தான்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, ஓடி ஒளிய விரும்பவில்லை போர்க் குற் றம் என்று வரும்போது ஒரு சிலர் ஓடி ஒளிவதையும் தங்களது முக த்தை மறைத்துக் கொள்ள முயலுவ தையும் நான் பார்க்கிறேன். நான் அப் படி ஒளிந்து கொள்ளவோ, மெளனம் காக்கவோ விரும்பவில்லை.
அப்படிச் செய்யப்போனால், எதை யோ நாங்கள் மறைக்க முயலுகி றோம் என்ற எண்ணம் தான் மற்றவ ர்களுக்கு ஏற்படும்.யுத்தம் நடத்தப் பட்ட விதம் தொடர்பான பல்வேறு வியங்களும் அரசாங்கத்துடன் வெளிப்படையாக விவாதிக்கப்படுவ தற்கான ஒரு அவசியம் இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். யுத் தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நட ந்த விடயங்களுக்கு தானோ நாட்டின் அரசியல் தலைவர்களோ காரணமாக இருந் திருக்கவில்லை என்று பொன் சேகா கூறினார்.
யுத்தத்தின் இறுதி கட்டம் பற்றி எவர் முன் னாலும் தோன்றி பதில் சொல்ல தனக்கு எவ் வித அச்சமோ தயக்க மோ இல்லை என்று அவர் வலியுறுத் தினார்.ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையின் போது ஆயிரக்க ணக்கான சிவிலியன்கள் கொல்லப் பட்டனர் என்ற குற்றச்சாட்டை அவர் முழுமையாக மறுத்தார். ஜனாதிப தியாக ஆவதற்கு வேண்டியோ,நாடா ளுமன்ற உறுப்பினராவதற்கு வேண் டியோ தான் அரசியலில் ஈடுபடவி ல்லை. இலங்கையில் காணப்படும் ஊழல்மிகு அரசியல் கலாசாரத்தை மாற்றவதற்காகவே தான் அரசியலில் ஈடுபட விரும்புவதாக பொன்சேகா தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த இராணுவ நடவடிக்கை யின்போது இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா.அந்த வெற்றியின் பெருமை யாரைச் சேரும் என்ற விடயத்தில், ஜனாதி பதி மகிந்த ராஜபக் மற்றும் அவர் சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக் ஆகியோருடன் பொன் சேகா முரண்பட நேர்ந்திருந் ததை அடுத்து பல்வேறு குற்றச்சாட் டுகளுக்காக சிறையில் அவர் அடைக் கப்பட்டிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக