முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது தொடர்பான ஆவணத்தில் மகிந்த கையெழுத்திட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதியன்று அவர் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தநிலையில் அந்த ஆவணம் நாளை திங்கட்கிழமை...
இலங்கையின் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதன்போது சரத்பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தாம் அரசாங்கத்துக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை சரத் பொன்சேகா நாளை திங்கட்கிழமை திரும்பப் பெற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக