பெரிதாகக் கத்தித் தெரிவித்துவந்தபோது அவரைக் கோபத்தில் விமானத்திலிருந்து தள்ளிவிட்டுள்ளார் அந்தப் பெண் விமானி.
அவர் விமானத்திலிருந்தபடி, “கப்ரன் பெண்ணென்று யாராவது எனக்குச் சொல்லியிருக்கவேணும். ஒரு விமானம் பெண் கட்டுப்பாட்டில் இருந்தால் நான் விமானத்தில் பறக்கமாட்டேன்” என்று கத்திக்கொண்டிருந்தார்.
இதனால் கோபங்கொண்ட பெண் விமானி அவரை விமானத்திலிருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனால் இந்த பிரேசிலிய விமானம் ஒரு மணித்தியாலம் தாமதமாகியே அது சென்றடையவேண்டிய Goias மாநிலத்தின் விமான நிலையத்திற்குப் பயணித்தது.
இவர் பின்னர் காவற்றுறையினரால் கைதுசெய்யப்பட்டு விமான நிலையத்திலிருந்து அகற்றப்பட்டார்.
அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டதா இல்லையா என்ற அவர் பற்றிய எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.
தமது Trip Airlines விமானச்சேவையில் 1400 பெண்கள் பணியாற்றுவதாகவும் இவ்வாறான சகிக்கமுடியாத கருத்துக்களைத் தாம் மன்னிக்கப்போவதில்லையென்றும் கருத்துத் தெரிவித்தனர் விமானச் சேவையினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக