வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் திருமணமும் ஒன்றாக கருதப்படுகின்றது. சிலர் தங்களது திருமண வைபவத்தை விசித்திரமான முறையில் நடத்துகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த Diane Waller, Randy Kjarland என்ற ஜோடி தமது திருமண வைபவத்தை கல்லறையில் ஒன்றில் நடத்தியுள்ளது.
உயிரிழந்த தமது பெற்றோர் உறவினரை திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் இவ்வாறு மயானத்தில் திருமணத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திருமண வைபவத்தில் உயிருடன் இருக்கும் 60 உறவின நண்பர்களும் கலந்து கொண்டனர். குறித்த இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தாய், தந்தை, உறவினர்களின் கல்லறைகளுக்கு மத்தியில் Diane Waller, Randy ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக