Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » அமெரிக்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பீரிஸ் கலந்துரையாடல்!

அமெரிக்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பீரிஸ் கலந்துரையாடல்!

Written By ADMIN on வெள்ளி, 18 மே, 2012 | 11:17 AM


அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்நாட்டு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் பலரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட உதவியாளர், தேசிய பாதுகாப்புச் சபையின் பல்தரப்பு விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர்
சமந்த பவர் ஆகியோரையும்...,

அமைச்சர் பீரிஸ் சந்தித்தார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான நிலைவரம் நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள்,

அவற்றின் சிபாரிசுகளை பின்பற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்பன குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை அதிகாரகளுக்கு அமைச்சர் பீரிஸ் முழுமையாக விபரித்ததாக என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக