இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதி யுத்தததில் உயிரிழந்த பொது மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்கள். எமது இனத்தின் அடையாளங்களை திட்டமிட்ட வகையில் அழிப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் தற்போது தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
தமிழ் பிரதேசங்களில் பௌத்த கோயில்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்படுகின்றன. எமது கலாச்சாரங்கள் பண்பாடுகள் சிதைக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று யுத்த்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் நினைவஞ்சலி கூட செய்ய முடியாத துர்பாக்கியமான ஒரு சூழ் நிலையிலேயே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அன்று முதல் இன்று வரை எம்மை அச்சுறுத்தும் நடவடிக்கைகளையே தானம் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றனது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக