பல அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களை கொன்றழிந்து முடிவடைந்த போரின் மூன்றாண்டு நிறைவான இன்றைய நாளில் பெரும் சோகத்தில் மூழக்கியிருக்கும் வன்னியில், முல்லைத்தீவு, பரந்தன் பகுதிகளில் கடும் வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னராக மீண்டும் பாரிய குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதுடன், கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், குறித்த பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன் காட்டுக்குள் விறகு எடுக்கப் போன சிலரும் இராணுவத்தினரால் பிடித்து அடித்து இழுத்து செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. இதனையடுத்து இன்று A9 பாதையிலும் A35 பாதையிலும் வழமைக்கு மாறாக பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் தேடுதல் நடத்திய வண்ணம் உள்ளனர்.
வழமையாக தாயக மண் மீட்புக்காக தன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களை கெளரவிக்கும் முகமாக ஒவ்வொரு மாவீரர் தினங்களில் சிறீலங்கா படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது விடுதலைப் புலிகளின் பாணி. தமிழர்களின் வரலாற்றில் வலி சுமந்த துக்கதினம் இன்றாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக