Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பற்றி திடுக்கிடும் தகவல்!

பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பற்றி திடுக்கிடும் தகவல்!

Written By ADMIN on வெள்ளி, 18 மே, 2012 | 4:26 PM


பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி இந்திய தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டிருந்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள தலோஸ் நகரில் தீவிரவாதி முகமது மெர்ரா கடந்த மார்ச் 22-ந்தேதி சிறப்பு அதிரடிபடையால் சுட்டுக் கொல்லப்பட்டான்.


தலைநகர் பாரீசில் மார்ச் 15-ந்தேதி அவன் 3 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றான். அதன்பின்னர் 4 நாட்கள் கழித்து யூதர் இனத்தை சேர்ந்த ரப்பி என்பவரையும் அவரது 2 மகன்களையும் பள்ளியில் வைத்து சுட்டு கொன்றான். மேலும் அதே பள்ளி வளாகத்தில் 7 வயது சிறுமியை கொலை செய்ய துரத்தினான்.

இந்த கொலை காட்சிகள் அனைத்தும் தானியங்கி காமிராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து அவனை தேடி வந்த போலீசார் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அவன் பதுங்கி இருப்பதை அறிந்தனர். அதை தொடர்ந்து 32 மணி நேர முற்றுகைக்கு பிறகு சிறப்பு அதிரடி படை போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதி மெர்ரா பற்றிய தகவல் அப்போது வெளியிடப்படவில்லை. அவன் தலிபான் தீவிரவாதி என தற்போது தெரிய வந்துள்ளது. அவன் கடந்த ஆண்டு கோடை காலத்தில் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறான்.

அங்கு அவனுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தை தகர்க்கும்படி ஜிகாத் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவன் பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டிருந்தான்.

இந்த தகவலை வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர். இந்த தகவலை பாரிஸ்  பத்திரிகை செய்தியாக பிரசுரித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக