Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » பேஸ் புக் மூலம் காதலை வளர்த்து கற்பை பறி கொடுத்த இரு பெண்கள்

பேஸ் புக் மூலம் காதலை வளர்த்து கற்பை பறி கொடுத்த இரு பெண்கள்

Written By ADMIN on வெள்ளி, 25 மே, 2012 | 7:51 PM



பேஸ் புக் மூலம் காதலை வளர்த்து ஓட்டலில் கற்பை இழந்து ஏமாற்றப்பட்ட பெண்கள் 2 பேர் வேலூர் ஏடிஎஸ்பியிடம் புகார் செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சித்ரா, அவரது தோழி நித்யா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை
பார்த்து வருகின்றனர்.

நித்யாவுக்கு பேஸ் புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். சதீஷ் நண்பர் ஆனந்த்பாபு. சதீஷ், நித்யா மூலம் ஆனந்த்பாபுவுடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த 2 ஜோடிகளின் நட்பு பேஸ் புக் மூலம் வளர்ந்தது. பின்னர் தொலைபேசியிலும் நட்பை வளர்த்தனர். கடந்த ஜனவரி மாதம் சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர் சென்னைக்கு சென்றனர்.

வேலூரை சுற்றிப்பார்க்கலாம் எனக்கூறி சித்ரா, நித்யா ஆகியோரை அழைத்துக்கொண்டு வந்துள்ளனர். ஆனால் வேலூருக்கு வராமல் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகள் எடுத்து தங்கினர். நித்யா, சதீஷ் ஆகியோர் ஒரு அறையிலும், சித்ரா, ஆனந்த்பாபு ஆகியோர் மற்றொரு அறையிலும் தங்கியுள்ளனர். 2 வாலிபர்களும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி தங்கள் பேஸ் புக் தோழிகளுடன் ஜாலியாக இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த பிப்ரவரி மாதமும் அந்த பெண்களை ராணிப்பேட்டைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் ஆனந்த்பாபு, சித்ராவுடன் தொலைபேசியில் பேசுவதை நிறுத்திக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் சித்ராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆனந்த்பாபு பேசி, அதே ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சித்ரா அங்கு செல்ல மறுத்துவிட்டார்.
ஓட்டலில் தனிமையில் இருந்த காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி ஆனந்த்பாபு மிரட்டியுள்ளார். இந்நிலையில் நித்யாவும் தன்னை சதீஷ் ஏமாற்றிவிட்டதாக சித்ராவிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து வேலூர் ஏடிஎஸ்பி முருகேசனிடம் சித்ரா நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஏடிஎஸ்பியிடம் புகார்
பேஸ் புக்கில் காதலை வளர்த்து ஓட்டலில் கற்பை இழந்த பெண்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக