இந்தியாவை சேர்ந்தவர் தருண்ரவி (20). இவர் நீண்ட காலமாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் தங்கியுள்ளார். நியூஜெர்சி மாகாண பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருடன் விடுதியில் டைலர் கிளமெண்டி (18) என்பவர் தங்கி இருந்தார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
ஓரின சேர்க்கையாளரான கிளமண்டி தனது மற்றொரு சக நண்பருடன் முத்தம் கொடுத்ததை தருண் ரவி மறைந்திருந்து வெப் காமிராவில் படம் பிடித்தார். பின்னர் அதை இணைய தளத்தில் பரவ விட்டார். இதனால் அவமானம் அடைந்த கிளமெண்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்தது.
தற்கொலைக்கு தூண்டியதாக தருண்ரவி கைது செய்யப்பட்டார். இவர் மீது நியூஜெர்சியில் உள்ள நியூபிரன்ஸ்விக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிளன் பெர்மன் குற்றம் சாட்டப்பட்ட தருண்ரவிக்கு 30 நாள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 3 ஆண்டுகள் நன்னடத்தை விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அப்போது 300 மணி நேரம் சமூகசேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சமூகசேவை நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த தண்டனை தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக ஓரின சேர்க்கையாளர்களின் ஆதரவு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக