பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சொத்துக்களை சுவீகரிக்கும் அதிகாரம் கொண்ட தகுதிவாய்ந்த அதிகாரசபை அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனிநபர் மற்றும் குழுக்களின் பெயர்கள் வர்த்தமானி
மூலம் பிரசுரிக்கப்படவுள்ளன.
இந்த அதிகாரசபை, வெளியுறவுத்துறை அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்படவுள்ளது. எனினும், இதில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான நிதியுதவிகள் உட்பட்ட விடயங்களுக்கு விலக்களிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை அவதானிக்குமாறு கேட்கப்பட்டுள்ளன. குறித்த வாடிக்கையாளர்கள், பயங்கரவாத பட்டியலுக்குள் இருந்தால் அல்லது எச்சரிக்கை பட்டியலுக்குள் இருந்தால் அது தொடர்பில் வங்கிகளும் நிதிநிறுவனங்களும் புதிய அதிகாரசபைக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்கப்படவுள்ளது.
அதேநேரம் வங்கிகளும் நிதிநிறுவனங்களும் ஒரே நேரத்தில் 200, 000 ரூபாவுக்கு அதிகமான தொகையின் வைப்பு மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பில் தகவல்களை அதிகாரசபைக்கு வழங்கவேண்டும் என்றும் புதிய சட்டத்தின்படி கோரப்படவுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக