Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபர் கொலை !

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபர் கொலை !

Written By ADMIN on திங்கள், 21 மே, 2012 | 5:00 PM


துறையூர்: துறையூர் அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலி பரை வெட்டிக்கொன்ற தாக போலீசில் சரணடை ந்த விவசாயி வாக்குமூலம் அளித்துள்ளார்.துறையூர் அடுத்த நாகாலாபுரத்தை சேர்ந்தவர் பழனிமுத்து (52). இவர் தனது தோட்டத்திற்குள் கடந்த 18ம் தேதி அத்துமீறி
நுழைந்த ஒருவரை திருடன் என நினைத்து வெட்டிக்கொன்று கிணற்றில் வீசிவிட்டதாக கூறி நாகலாபுரம் விஏஓ சசிகலா மூலம் 19ம் தேதியில் போலீசில் சரணடைந்தார். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலையான வாலிபர் துறையூர் சொரத் தூர் ரோட்டில் வசிக்கும் சிவப்பிச்சை என்பவரது மகன் சரவணன் (27) என தெரியவந்தது.
இதையடுத்து பழனிவேலுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பழனிமுத்து அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறி யது:
பழனிமுத்து மகன் வடி வேலு. மருமகள் உமா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கொலையான சரவணனுக் கும், மருமகள் உமாவுக்கும் பள்ளி காலத்திலிருந்தே காதல் இருந்துள்ளது. திருமணத்துக்கு பின்பும் இருவ ரும் குறிப்பிட்ட தோட்டத்தில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதை உமாவின் மாமனார் பழனிமுத்து, கணவர் வடி வேல் ஆகியோர் கண்டித்தனர்.
ஆனால் உமாவும், சரவணனும் காதலை கைவிடா மல் தொடர்ந்துள்ளனர். சம்பவத்தன்று வழக்கம் போல் உமாவை சந்திக்க தொட்டத்துக்கு சென்ற சரவணனை பழனிமுத்து வெட்டிக்கொன்று கிணற் றில் வீசியுள்ளார். இதைதொடர்ந்து பழனிமுத்து கைது செய்யப்பட்டு துறை யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். என்றனர்.
கொலையான சரவணனுக்கு மனைவி கோமதி, 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக