ஷாபிலியா அகமது என்ற அந்த சிறுமி கொலைசெய்யப்பட்டு கும்ப்ரியா அருகே ஆற்றில் வீசப்பட்டார். 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. பின்னர் 5 மாதங்கள் கழித்து அவரது உடல் கைப்பற்றப்பட்டது.7 ஆண்டுகளாக இந்த கொலை வழக்கில் மர்மம் நீடித்துவந்தது. எனினும் அக்டோபர் 2010-ல் அந்த சிறுமியின் சகோதரி அலீஷா போலீசிடம் இதுகுறித்து தெரிவித்த பின்னர் இந்த கொலையில் இருந்த மர்மம் விலகியது.
தற்போது 23 வயதாகும் அலீஷாவுக்கு கொலை நடந்த போது 15 வயது. அவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் தான் இந்த கொலையின் மர்மமுடிச்சு அவிழ்ந்தது என பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஷபீலியா நிறைய ஆண்நண்பர்கள் வைத்துக் கொள்வதும், மேற்கத்திய கலாச்சாரப்படி ஆடைகள் அணிவதும் அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிறுமியை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துவைக்க முயன்றனர்.
ஆனால் அவர் விஷம் குடித்துவிட்டார். இதையடுத்து மீண்டும் பிரிட்டனுக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு வாஷிங்டனில் உள்ள தங்களது வீட்டில் வைத்து ஷபீலியாவைக் கொலைசெய்து ஆற்றில் வீசிவிட்டனர்.எனினும் இந்த கொலைக்குற்றச்சாட்டை ஷபீலியாவின் பெற்றோர் மறுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக