தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதை யும், அவர்கள் கழிவறைக்கு செல்வதையும் அப்பகுதியை சேர்ந்த பூசாரி கண்ணன் என்பவர் தன்னுடைய மொபைல் ஃபோனில் ஒழிந்திருந்து படம் எடுத்து சம்மந்தப்பட பெண்களை
மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொ.மல்லாபுரம் ஊர்பொதுமக்கள் அரூர் ஆர்.டி.ஓ., காமராஜரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாங்கள் சுமார் 100 குடும்பத்தினர் பொம்மிடி - தர்மபுரி சாலையில் உள்ள பொ.மல்லாபுரத்தில் குடியிருந்து வருகிறோம். அங்கு மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் செட்டியான் என்பவரின் மகன் சரவணன் என்பவரும் எங்களுடன் வசித்து வருகிறார்.
அவருக்கு சிறு வயதிலிருந்தே கழிவறைக்கு செல்லும் பெண்களை மறைந்து இருந்து பார்க்கும் பழக்கம் உண்டு. எங்கள் பகுதியில் பெண்கள் குளிப்பதையும், கழிவறைக்கு செல்வதையும் அவர் தன்னுடைய மொபைல்ஃபோனில் படம் எடுத்துள்ளதாகவும் கூறி பெண்களை உடலுறவுக்கு அழைக்கிறான்.
சரவணன் வைத்திருந்த மொபைல்ஃபோனை அவரது மகன் அருகிலுள்ள இன்டர்நெட் சென்டருக்கு எடுத்து சென்றுள் ளான். அங்குள்ளவர்கள் போட்டுப்பார்த்தபோது, அதில் எங்கள் பகுதி பெண்கள் நிர்வாணமாக குளிப்பது, கழிவறைக்கு செல்வது போன்ற காட்சிகள் இருந்துள்ளது. இச்சம்பவம் முழுவதும் பொம்மிடி போலீஸாருக்கு தெரியும். ஆனால், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என எங்கள் பகுதி பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை அறிந்தவுடன் சரவணன் தலைமறைவாகி விட்டார். போலீஸாரும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்துவிட்ட சரவணன் தற்போது, மீண்டும் தனது பழைய செயல்களை செய்ய ஆரம்பித்துள்ளான்.
இதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் பீதியில் உள்ளனர். எனவே பூசாரி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுகொண்ட கோட்டாட்சியர் காமராஜ் உடனடியாக விசாரணை நடத்தும்படி வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக