Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out
Home » » ஆசிரியைகளை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது!

ஆசிரியைகளை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது!

Written By ADMIN on செவ்வாய், 22 மே, 2012 | 7:35 PM


மதுரையில் ஒரு பள்ளியில், மாணவி சரியாக படிக்கவில்லை என கண்டித்ததால், பெண் ஆசிரியர்களின் போட்டோக்களை பேஸ்புக்'கில் வெளியிட்டு, தவறாக சித்தரித்த பிளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்தனர். ஒரு
பள்ளியில் மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை; ஆண் நண்பருடன் ஊர் சுற்றுவதாகக்கூறி ஆசிரியை கண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த மாணவி, ஆசிரியையை பழிவாங்க முடிவு செய்தார். அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் தனது ஆண் நண்பரிடம் மாணவி, "பள்ளி சார்பில் சுற்றுலா சென்ற போது, மொபைல்போனில் எடுத்த போட்டோவில் சம்பந்தப் பட்ட ஆசிரியை, மற்றும் மற்றொரு ஆசிரியை படம் என்னிடம் உள்ளது,' என தெரிவித்துள்ளார்.

மாணவன், இரண்டு ஆசிரியைகளின் படத்தை "இ-மெயில்' முகவரியுடன் "பேஸ்புக்'கில் வெளியிட்டு, "இவர்களை தேவைக்கு அழைக்கலாம்' என தவறாக சித்தரித்துள்ளார். மாணவனை மதுரை சைபர்கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், மாணவன் கைதாகியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக