நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பச்சேரி கிணற்றில் கடந்த 8ந் தேதி ஆண் உடல் மிதந்த்து அதைக் கைப்பற்றிய போலீசார் சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைந்தனர்.விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்குளத்தைச் சார்ந்த தச்சுதொழிலாளி முருகன் என்பது தெரிய வந்த்து அவர்தலையில் கம்பால்
அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்த்து.
சங்கரன் கோவில் டி.எஸ்.பி. கலிபுல்லா,இன்ஸ்பெக்டர் விஜயகுமார் எங்.ஜ.க்கள் ஆகிய்யோர் விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக கரிவலத்தை அடுத்துள்ள பச்சேரியைச் சேர்ந்த மாடசாமியின் மனைவி லட்சுமியை (40) கைது செய்தனர். போலீசில் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் திகிலடிக்க வைக்கிறது.எனக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாத்திர வியாபாரி மாடசாமிக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். 5 ஆண்டுகட்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டார் பிறகு நான் கட்டிடவேலைக்குச் செல்ல நேரிட்டது அங்கே வேலைக்கு வந்த தச்சுத்தொழிலாளி முருகனுடன் பழக்கம் ஏற்பட்டு தொடர்பு வைத்துக் கொண்டோம்.
சில மாதங்களுக்கு முன்பு நான் சொந்த ஊரான பச்சேரிக்கு வந்து விட்டேன் நான் வந்த பிறகும் அவருடன் தொடர்பு நீடிக்கத்தான் செய்தது.எங்களுக்குள் உறவுவைத்துக் கொண்டோம் கடந்த 6ந் தேதி இரவு முருகன் மதுஅருந்திவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்.மகன்கள் இருக்கும் போதே என்னை உறவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்தார் நான் மறுத்தேன். பின்னர் அருகில் உள்ள தோட்டத்திற்குச் சென்றோம். நான் அழைக்கும் போதெல்லாம் உறவுக்கு வரவேண்டும் என்று முருகன் கட்டாயப்படுத்தியதால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் என்ன்னத் தாக்கினார்.
ஆத்திரப்பட்ட நான் கம்பால் முருகனின் தலையில் அடித்ததில் மயங்கிவிழந்தார். பின்னர் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்து கிணற்றில் உடலை வீசி விட்டு வந்துவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்த லட்சுமியை சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி,ரிமாண்ட் செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக