ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற ஏப்ரல் 8ம் தேதியன்று புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட பொது
இடத்தில், பொதுமக்களின் முன்னிலையில் புகை பிடித்திருக்கிறார்.
இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப் பாகியுள்ளது. இதை கண்டித்து ஜெய்ப்பூர்வாசியான ஆனந்த் சிங் ரத்தோர் ஜெய்ப்பூர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஏப்ரல் 9ம் தேதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
பொதுமக்கள் முன்னிலையில் அவர் புகை பிடிக்கும் நிலையில் நின்றிருப்பது, அவரது இளம் ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து வரும் 26ம் தேதியன்று ஷாரூக்கான் ஜெய்ப்பூர் கோர்ட்டில் ஆஜராகுமாறு ராஜஸ்தான் போலீஸார் சம்மன் அனுப்பினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக