வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட ``தி டர்ட்டி பிக்சர்'' என்ற படம், ``டர்ட்டி பிக்சர் சில்க் சக்கத் மகா'' என்ற பெயரில் கன்னடத்தில் தயாராகிறது.இதில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல மாடல் அழகி வீணா மாலிக் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
கன்னட படத்தில் நடிப்பதற்காக பெங்களூர் வந்த வீணா மாலிக், பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட சிக்கலான கேள்விகளுக்கு கூட கோபப்படாமல், ஆத்திரம் அடையாமல் கவர்ச்சியாக சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். நிருபர்கள் கேள்விகளும், வீணா மாலிக் பதில்களும் வருமாறு:-
உங்கள் குழந்தை பருவம் பற்றி சொல்லுங்களேன்?
நான் மிகவும் சூடானவள் என்பது எனக்கு தெரியும். ஆனால் குழந்தை பருவத்தில் நான் மிகவும் சுட்டிக் பெண்ணாக அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருந்தேன். பள்ளிப்பருவத்தில் மற்றவர்கள் பதற்றத்துடன் இருந்தாலும் நான் அமைதியாக இருப்பேன்.
உங்களைப் பற்றி வெளியாகும் சர்ச்சைக்குரிய கிசு கிசு செய்திகளை படிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
தற்போது எனக்கு எதிராக வரும் கிசு கிசுக்கள் பற்றி நான் கவலைப்படுவது இல்லை. எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொள்ளும் சக்தி எனக்கு உண்டு. எனது தனிப்பட்ட வாழ்க்கையை பலர் அலசி ஆராய்ந்து இஷ்டம் போல பேசுகிறார்கள்.
ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. ஏனென்றால் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறும்போது அதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு இது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போது அப்படி அல்ல. எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன்.
தென்னிந்திய மொழிகளில் கன்னட படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
தமிழ் மற்றும் கன்னட திரைப்பட வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. ஆனால் நல்ல கதைக்காக, கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். இப்போது நடிக்கும் ``டர்ட்டி பிக்சர்...'' படம், என் திறமைக்கு சவாலாக அமைந்துள்ள படமாக கருதுகிறேன்
மேலும் வலுவான கதை அம்சம் கொண்டதாகவும் உள்ளது. அத்துடன் என் திறமையை வெளிப்படுத்தும் படம் என்றும் கருதினேன். எனவே, கதையை கேட்டதும் ஒப்புக் கொண்டேன். படத்தில் ``சூடான'' காட்சிகளும் இருக்கும். கவர்ச்சி காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் உண்டு.
எந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
போலீஸ் வேடம் ஏற்று நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உளவாளி வேடமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவ்வாறு

0 கருத்துகள்:
கருத்துரையிடுக